×

பொங்கல் தொடர் விடுமுறை ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு உயர்வு

சென்னை: பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளனர். இது, பயணிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. சொந்த ஊர் செல்பவர்களுக்கு வசதியாக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனிடையே பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை பல மடங்கு உயர்த்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண தமிழக போக்குவரத்து துறை, ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கட்டணத்தை நிர்ணயித்தனர்.ஆனாலும், பொங்கலை முன்னிட்டு சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்ல படுக்கை வசியுடன் ஏசி பேருந்துக்கு அதிகபட்ச கட்டணம் ரூ.3,140 ஆக நிர்ணயித்துள்ள நிலையில் தற்போது ரூ.3,600 முதல் ரூ.3,900 வரை வசூலிக்கப்படுகிறது. நெல்லைக்கு ஏசி பேருந்துக்கு ரூ.2,800 நிர்ணயித்துள்ள நிலையில் ரூ.3,700 முதல் ரூ.4,000 வரையும், திருச்சிக்கு ரூ.1,500க்கு பதில் ரூ.1,800 முதல் ரூ.2,200 வரை வசூலிக்கப்படுகிறது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

The post பொங்கல் தொடர் விடுமுறை ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு உயர்வு appeared first on Dinakaran.

Tags : Pongal serial holiday ,Chennai ,Pongal ,Pongal series ,Dinakaran ,
× RELATED வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை...